பக்கம் எண் :


2. மனையறம்படுத்த காதை

           வெண்பா

தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து--நாமந்
தொலையாத இன்பமெலாந் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று.


1
உரை
4

       (தூம ........... போனின்று.) மண்மேல் நிலையாமை கண்ட வர்போல் நின்று - புவியின்கண் பொருள் முதலியவற்றின் நிலை யாமையைக் கண்டு அவை உள்ளபொழுதே அனைத்தின்பமும் துய்த் தற்கு விரைதல் போல் நின்று, காமர் மனைவியெனக் கைகலந்து - காமனும் இரதியும்போலக் காதலால் ஒருவர் ஒருவரிற் கலந்து, தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தாலென ஒருவார் - சினத்தை யுடைய பாம்புகள் ஒன்றுபட்டுத் தழுவினாற்போல விட்டு நீங்கா ராய், நாமம் தொலையாத இன்பமெலாம் துன்னினார் - அழகு கெடாத இன்பத்தையெல்லாம் துய்த்தனர் (கோவலனும் கண்ணகி யும்) என்க.

                     மனையறம்படுத்த காதை முற்றிற்று.