பதினோராடலாவன;
அசுரரைக் கொல்ல அமரராடிய பதி னொரு கூத்துக்கள். அவற்றை.
''கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன்
குடைதுடிமா லல்லியமற் கும்பம் --
சுடர்விழியாற்
பட்டமதன் பேடுதிருப் பாவையரன்
பாண்டரங்கம்
கொட்டியிவை காண்பதினோர் கூத்து''
என்பதனாலறிக. இவை நின்றாடல், படிந்தாடல் என இருவகையின;
''அல்லியங் கொட்டி குடைகுடம்
பாண்டரங்கம்
மல்லுட னின்றாட லாறு''
''துடிகடையம் பேடு மரக்காலே பாவை
வடிவுடன் வீழ்ந்தாட லைந்து''
இக்கூத்து ஒவ்வொன்றும் எவ்வெக்
காரணம்பற்றி எவ்வெவ்விடத்து
நிகழ்த்தப்பட்டனவென்பது பின்னர்க் 1கடலாடு
காதையால்
விளக்கமாம்.
பாட்டு என்றது அக நாடகங்களுக்கும்,
புறநாடகங்களுக்கு முரிய உருக்களை. அக நாடகங்களுக்குரிய உருவாவன; கந்த முதல் பிரபந்தவுரு
வீறாக இருபத்தெட்டும். இவற்றுள், கந்த மென்பது அடிவரையறை யுடைத்தாய் ஒரு தாளத்தாற்
புணர்ப் பது; பிரபந்த மென்பது அடிவரையறை யின்றிப் பல தாளத் தாற் புணர்ப்பது. புறநாடகங்களுக்குரிய
உருவாவன; தேவ பாணி முதலாக அரங்கொழி செய்யு ளீறாகச் செந்துறை விகற் பங்க ளெல்லாமென்க.
கொட்டு - கொட்டப்படும் வாச்சியங்கள்.
அவை கீதாங் கம், நிருத்தாங்கம், உபயாங்கம் என்பன. அவற்றுள், கீதாங்கம் கீதத்திற்கு
வாசிப்பது; நிருத்தாங்கம் நிருத்தத்திற்கு வாசிப் பது; உபயாங்கம் இரண்டிற்கும் வாசிப்பது.
|