இங்ஙனம் உதவிபுரிந்த கடப்பாட்டாளர் அனைவரும் மற்றும் பலவகையாலும் தமிழ்ப் பணி
புரிந்து நீடிய நல் வாழ்வு பெற வேண்டுமெனச் செந்தமிழ்த் தெய்வத்தின் திருவருளைச்
சிந்தித்து வாழ்த்துகின்றேன்.
எத்துணையும் இழிந்த துரும்பனைய சிறியேனையும்
கருவியாகக் கொண்டு இத்தகைய பணிகளை நிறைவேற்றியருளும் திருவருளின் பெருமையை எங்ஙனம்
அறிந்து போற்றவல்லேன்!
ந. மு. வேங்கடசாமி.
|