பக்கம் எண் :

  6. வாழ்த்துக் காதை

            [கண்ணகியைப் பிரதிட்டை செய்த பிற்றை நாளிலே செங்குட்டுவன் மண்ணரசர் திறை கேட்டிருந்த பொழுது, முன்பு கோவலன் கொலையுண்டது முதலியவற்றை மாடலன் கூறக் கேட்டோர்களுள் தேவந்தியும் கண்ணகியின் செவிலித்தாயும் அவள் அடித் தோழியும் காவிரிப்பூம்பட்டினத்தினின்று நீங்கி மதுரையை அடைந்து, அங்கே கண்ணகியைக் காணாமல் மாதரிமகள் ஐயையைக் கண்டு அவளோடும் வையைக் கரைவழியே சென்று மலைநாட்டை யடைந்து கண்ணகி கோயிலிற் புகுந்து, அங்கிருந்த செங்குட்டுவற்குத் தம்மை இன்னாரென அறிவித்துக் கண்ணகியின் பிரிவாற்றாமையால் வருந்தி அரற்றினர். அப்பொழுது கண்ணகி தெய்வ வடிவத்தோடு வெளிப்பட்டுச் செங்குட்டுவனுக்குக் காட்சி கொடுத்து வாழ்த்தினள். (இதன் கண் மூவேந்தர்களின் வாழ்த்தாகவுள்ள அம்மானைவரி, கந்துகவரி, ஊசல்வரி, வள்ளைப்பாட்டு ஆகிய செய்யுட்கள் மிக்க இன்பம் பயப்பன).]