105
|
என்னோ டிருந்த இலங்கிழை நங்கை
தன்னோ டிடையிருள் தனித்துய ருழந்து
போனதற் கிரங்கிப் புலம்புறு நெஞ்சம்
யானது பொறேஎன் என்மகன் வாராய்
|
|
என்னோடு
இருந்த இலங்கு இழை நங்கை தன்னோடு - நீ பிரிந்த பின்னர் என்னோடு உறைந்த விளங்குங்
கலனணிந்த கண்ணகியோடே, இடைஇருள் தனித்துயர் உழந்து போனதற்கு இரங்கிப் புலம்புறும்
நெஞ்சம் - இடையாமத்தே பிறர் அடையாத துன்பத்தை யடைந்து வேற்று நாடு சென்றதற்கு என்னுள்ளம்
வருந்தித் தனிமையுறும், யான் அது பொறேஎன் என் மகன் வாராய் - நீ உற்றதுயரை யான்
பொறுக்கேன் ஆதலான் என் மகனே ஈண்டு நீ வாராயோ ;
என்னோடிருந்த நங்கை என்றது கண்ணகியை.
புலம்புறும், முற்று. மகன், விளி. இது கோவலன் தாய் கூற்று. |
|
|