{ முடியுடை வேந்தர்
... முற்றிற்று. }
முடியுடை வேந்தர் மூவருள்ளும் - முடியுடைய மன்னராகிய சோழர் பாண்டியர் சேரர் என்னும்
மூவருள்ளும், குடதிசை ஆளும் கொற்றம் குன்றா ஆர மார்பிற் சேரர்குலத்து உதித்தோர்
- மேற்றிசைக்கண்ணதாகிய மலைநாட்டினை யாளும் குன்றாத வென்றியையும் ஆரமணிந்த மார்பினையுமுடைய
சேரர் குலத்துப் பிறந்தோருடைய, அறனும் மறனும் ஆற்றலும் - அறமும் ஆண்மையும் திறலும்,
அவர்தம் பழவிறல் மூதூர்ப் பண்புமேம்படுதலும் - அவரது பழைய பெருமையையுடைய தொன்னகராகிய
வஞ்சியின் இயல்பு மேம்பட்டு விளங்குதலும், விழவுமலி சிறப்பும் - அந்நகரின்கண் விழாக்கள்
நிறைந்த சிறப்பும், விண்ணவர் வரவும் - வானோர் வருகையும், ஒடியா இன்பத்து அவர்
உறை நாட்டுக் குடியின் செல்வமும் கூழின் பெருக்கமும் - கெடாத இன்பத்தையுடைய அவரது
நாட்டில் உறையும் குடிமகளின் செல்வமும் உணவின் பெருக்கமும், வரியும் குரவையும் விரவிய
கொள்கையின் - தம்மிற் கலந்த தன்மையையுடைய வரியும் குரவையுமாகிய பாட்டும் கூத்தும்,
புறத்துறை மருங்கின் - புறத்திணைக்குரிய துறைகளிலே, அறத்தொடு பொருந்திய மறத்துறை
முடித்த - அறத்துடன் கூடிய போர்த்துறைகளைச் செய்து முடித்த, வாய்வாள் தானையொடு பொங்கு
இரும் பரப்பின் கடல்பிறக்கு ஓட்டி - தப்பாத வாளினையுடைய சேனையுடன் சென்று மிக்க
பெரிய பரப்பினையுடைய கடலின் கண் வாழும் பகைஞரைப் பிறக்கிடுமாறு துரந்து, கங்கைப
|