பேர்
யாற்றுக் கரை போகிய - கங்கையாகிய பெரிய யாற்றின் கரைக்கண் மேற்சென்ற, செங்குட்டுவனோடு
- செங்குட்டுவன் என்னும் சீர்த்தி மிக்க வேந்தனோடு, ஒரு பரிசு நோக்கிக் கிடந்த
வஞ்சிக்காண்டம் முற்றிற்று - ஒருவாறு நோக்கும்படி அமைந்த வஞ்சிக் காண்டமென்னும்
இத் தொடர்நிலைச் செய்யுளின் மூன்றாம் பகுதி முற்றிற்று என்க.
சேரர் குலத்தோரின் அறன் முதலாக
ஈண்டுத் தொகுத்துரைத்தவற்றை இக்காண்டத்தில் ஆண்டாண்டுக் கண்டுணர்க. மறத்துறை முடித்த
குட்டுவன், தானையொடு கடல்பிறக் கோட்டிக் கரைபோகிய குட்டுவன் எனத் தனித்தனி முடிக்க.
கடல்பிறக் கோட்டியதும் கரைபோகியதும் 1முன்னர்ப்
போந்தமை காண்க. அறன்முதலாகக் குரவையீறாகக் கூறியன பலவும் செங்குட்டுவனோடு ஒரு
பரிசு நோக்கிக் கிடந்த வஞ்சிக் காண்ட மென்க.
வஞ்சிக் காண்டம்
முற்றிற்று.
|