வாழ்த்தும் கவுந்தியடிகளின் சார்புபற்றியே இதன்கண் இடம்பெற் றுள்ளமை காண்க. அடிகள்
சைவ சமயத்தினராயினும், அருகன், கொற்றவை, திருமால், செவ்வேள் என்னும் தெய்வங்களை
அவ்வத் தெய்வங்களைப் பரவும் அடியார்களின் உணர்ச்சியோடு கலந்து நின்று பாடியுள்ளமை
பெரிதும் பாராட்டற்குரியது.
அங்ஙனம் யாதொரு சமயத்திலும் வெறுப்பின்றி
எல்லாச் சம யங்களையும் மதித்துப் பாடியிருப்பதும், தமது சேரர் குடியினராகிய வேந்தர்களின்
உயர்ச்சியைப் போலவே ஏனைச் சோழ பாண்டிய வேந் தர்களின் உயர்ச்சியையும் ஒரு பெற்றியே
பாராட்டியிருப்பதும் இவருடைய நடுவுநிலையையும் மனத்தூய்மையையும் நன்கு புலப் படுத்துகின்றன.
அடிகள் இக் காப்பியத்தை முடிக்குமிடத்து,
இதனைத் தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர் என உலகமாந்தரை விளித்து, 'பரிவும் இடுக்கணும்
பாங்குற நீங்குமின்' என்பது முதலாக, 'செல்லுந் தே எத்துக்கு உறுதுணை தேடுமின்' என்பது
ஈறாக உரைத்துள்ள அறங்கள் மன்பதையெல்லாம் அறநெறியி லொழுகித் துன்பத்தி னீங்கி
இன்பமெய்த வேண்டுமென்னும் இவரது ஆர்வத்தையும் இரக்கத்தையும் புலப்படுத்துகின்றன.
காலம்; -- இதன் பதிகத்திறுதியில்,
"உரையிடை யிட்ட பாட்டு டைச் செய்யு, ளுரைசா லடிக ளருள மதுரைக் கூல வாணிகன் சாத்தன்,
கேட்டனன்" எனவும், மணிமேகலையின் பதிகத் திறுதியில் "இளங்கோ வேந்த னருளிக் கேட்ப,
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன், மாவண் டமிழ்த்திற மணிமேகலை துறவு, ஆறைம் பாட்டினு
ளறிய வைத்தனனென்" எனவும் கூறப்பட்டிருத்தலானும், கடைச் சங்கப் புலவராகிய சீத்தலைச்
சாத்தனாரே மணிமேகலை யாசிரியரென் பது போராசிரியர் முதலியோர் கருத்தாகலானும்,
சேரன் செங்குட்டு வனைச் சங்கப் புலவராகிய பரணர் பதிற்றுப்பத்திற் பாடியிருத்தலா
னும் இளங்கோவடிகள் காலம் கடைச் சங்கப் புலவர் காலமெனத் துணியப்படுகின்றது.
செங்குட்டுவன் பத்தினிக் கோட்டம்
இயற்றிக் கண்ணகிக்கு விழாக் கொண்டாடிய காலத்து இலங்கை யரசனாகிய கயவாகு வென்பவன்
உடனிருந்தானென்று வரந்தரு காதையாலும், அக் கய வாகுவும் இலங்கையிற் கண்ணகிக்குக்
கோயில் கட்டுவித்து விழாக் கொண்டாடினா னென்று இந்நூலின் முன்னுள்ள உரைபெறு கட்
டுரையாலும் தெரிதலானும், இலங்கையிற் கயவாகு வென்னும் அர சன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின்
முற்பகுதியில் இருந்தானென இலங்கைச் சரிதத்தால் அறியப்படுதலானும் அதனை யடுத்த.
|