பக்கம் எண் :


அரும்பதவுரையாசிரியர் வரலாறு

        இவருடைய ஊர், பெயர், குலம், காலம் முதலியன புலப்பட வில்லை. இராவ் சாகிப் மு. ஆபிரகாம் பண்டிரவர்கள் வெளியிட் டுள்ள கருணாமிர்த சாகரம் என்னும் புத்தகத்திற் பலவிடத்தில் செயங்கொண்டார் என்னும் பெயரால் இவர் குறிக்கப்பட்டுளர். செயங்கொண்டாரென அன்னார் கொண்டமைக்கு ஆதாரம் யாதெ னத் தெரியவில்லை. இவரது காலம் நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார் என்பவர்களின் காலத்திற்கு முந்தியதென்று மட்டும் தெரி கிறது. இவர்,

        "கரும்பு மிளநீருங் கட்டிக் கனியும்
        விரும்பும் விநாயகனை வேண்டி -- அரும்பவிழ்தார்ச்
        சேரமான் செய்த சிலப்பதி காரத்தைச்
        சாரமாய் நாவே தரி"


        எனத் தொடக்கத்தில் மூத்த பிள்ளையார்க்கு வாழ்த்துக் கூறியிருப் பதும், "பிறவா யாக்கைப் பெரியோன்" (5; 169) என்புழி, 'பெரி யோன் -- மகாதேவன்' என்றும், "மறைமுது முதல்வன்" (வேட்டு வரி. இறுதி.) என்புழி 'மறைமுது முதல்வன் -- மாதேவன்' என்றும் உரைத்திருப்பதும் போல்வனவற்றால் இவரது சமயம் சைவமாம் என்பதும், சைவநூல்களின் துணிபொருளையும் மரபினையும் இவர் நன்கறிந்தவராவ ரென்பதும் புலனாகின்றன. ஆயின், 'அறிவனென் றது உறையூர் ஸ்ரீகோயில் நாயனாரை' (11 ; 4. உரை) எனவும், 'திருமால் குன்றம் -- அழகர் திருமலை' (11 ; 91. உரை) எனவும் இவர் கூறியிருப்பன போல்வன இவர் ஏனைச் சமயத்தார்களின் கொள்கைகளையும் மதித்து மரபு பிறழாமலே உரைக்கு மியல்பின ரென்பதனைப் புலப்படுத்துகின்றன.

        அடியார்க்கு நல்லார் உரை யெழுதுதற்கும் பெரிதும் துணையா யிருந்தது இவ்வரும்பதவுரையே. இவர், "என்பாரு முளர்" என் றங்கு ஒரோ வழிக் கூறுதலால் இவருக்கு முன்பும் ஓருரை இருந் திருக்கலாமெனத் தோன்றுகிறது; ஆனால் அவ்வுரை இப்பொழுது கிடைக்கவில்லை.

        அருஞ் சொற்களை யெடுத்துக் காட்டிப் பொருள் கூறுதலும் ஒரோவழித் தொடர்களின் முதல் இறுதிகளையேனும், முதலை மட்டு மேனும் காட்டிப் பொருளுரைத்தலும், இன்றியமையா இலக்கணங்