களைக் குறித்தலும். சொற்பொருண் முடிபு காட்டுதலும், சிறு பான்மை, நீண்ட தொடர்கட்குப்
பொழிப்புரை கூறிவிட்டுப் பின்பு அவற்றின் பகுதிகளைத் தனித்தனி யெடுத்து விளக்குதலும்
முதலா யின இவருரையின் இயல்புகளாம். இசை நாடகப் பகுதிகட்கு உரை கூறிய வகையில் அடியார்க்கு
நல்லாரும் இவருக்குக்கடன் பட்டவராவ ரென்பதனை முகவுரையில் விளக்கினமை கொண்டு அறியலாம்.
வேனிற் காதையில் அகநிலை மருதம் புறநிலை மருதம், அருகியன் மருதம், பெருகியன் மருதம்
(8 ; 39--40) என்பவற்றிற்கு இவர் இலக்கணமும் பாட்டும் மாத்திரையும் காட்டியிருப்பதும்,
அடி யார்க்கு நல்லார் அவற்றை வாளா விட்டிருப்பதும் அறியற்பாலன.
இருவரும் மாறுபட எழுதியிருக்கும் உரைகளை
ஆராய்வுழிச் சில இடங்களில் அரும்பதவுரையே பொருத்தமுடையதாகக் காணப் படுகின்றது.
சிற்சில விடத்து இரண்டு உரையாசிரியரும் கொண்ட பாடங்கள் வேறுபட்டுள்ளன. சிலப்பதிகாரம்
முழுதுக்கும் ஒரு வாறு பொருள் தெரிந்துகொள்ள இவ்வரும்பதவுரையே கருவியா யிருந்தது.
|