பக்கம் எண் :

3. அரங்கேற்று காதை


தலைக்கோல் எய்தித் தலையரங் கேறி

161
உரை
161

       தலைக்கோற் பெயர் பெறுதலாவது தலைக்கோலி என்னும் பட்டம் பெறுதல் ; தென்னாட்டுப் பழைய கல்வெட்டுக்களில் 1"திருநெல்வேலி உடையார் கோயில் பதியிலாரில் நக்கன் உரிமை அழகிய பெருமாளான உரிமை அழகிய பெருமாள் தலைக்கோலி" எனவும், "பதியிலான் நக்கன் அரங்கமான ஜயங்கொண்ட சோழத் தலைக்கோலியும், நக்கன் பூமியான பரமாக்கவிடங்கத் தலைக்கோலியும், நக்கன் சோழ விச்சாதரியான ஒலோக மாதேவி தலைக்கோலியும், நக்கன் பவழக் குன்றான மதுராந்தகத் தலைக்கோலியும்" எனவும் தலைக்கோலி என்னும் பட்டமும், அதனைப்பெற்ற பதியிலார் பலர் பெயரும் வருதல் ஈண்டு அறியத்தக்கன.


1 தமிழ்ப்பொழில், துணர் 6. பக்கம் - 197, 208.