பக்கம் எண் :


அடியார்க்கு நல்லார் வரலாறு

      2. ஓருந் தழிழொரு மூன்று முலகின் புறவகுத்துச்
        சேரன் றெரித்த சிலப்பதி காரத்திற் சேர்ந்தபொருள்
        ஆருந் தெரிய விரித்துரைத் தானடி யார்க்குநல்லான்
        காருந் தருவு மனையான் நிரம்பையர் காவலனே.

      3. காற்றைப் பிடித்துக் கடத்தி லடைத்தக் கடியபெருங்
        காற்றைக் குரம்பைசெய் வார்செய்கை போலுமற் காலமெனுங்
        கூற்றைத் தவிர்த்தருள் பொப்பண்ண காங்கெயர் கோனளித்த
        சோற்றுச் செருக்கல்ல வோதமிழ் மூன்றுரை சொல்வித்ததே.

நூற் சிறப்புப்பாயிரம்போற் காணப்படும் பழைய செய்யுள் பின் வருவது ;

      1. நீடிருங் குன்ற நிழல்காலு மண்டிலத்துக்
        கோடுகோ டாய்த்தோன்றுங் கொள்கைத்தே--கூடலார்
        கொண்டாடுஞ் செஞ்சொற் குடக்கோ முனிசேரன்
        தண்டா வுரைமுத் தழிழ்