(புள்வாய் முரசமொடு
......... நனிசிறந்ததுவென்.)
புள்வாய் முரசமொடு - பறவைகளின் ஒலியாகிய
முரசுடனே, பொறிமயிர் வாரணத்து - புள்ளிகள்பொருந்திய சிறகினை யுடைய கோழிச்சேவலும்
முள்வாய்ச் சங்கம் - கூர்த்த வாயையுடைய சங்கமும், முறைமுறை ஆர்ப்ப - தத்தம் முறைமைக்கேற்ப
ஒலிக்கவும், உரவுநீர்ப் பரப்பின் ஊர் துயில் எடுப்பி - கடல் போலும் பரப்பையும்
ஒலியையுமுடைய ஊரைத் துயிலெழுப்பி, இரவுத் தலைப்பெயரும் வைகறை காறும் - இருள் நீங்குதலுறும்
வைகறை யளவும், அரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சான் - இருள் மிக்க நள்ளிரவிலும்
ஒரு மாத்திரைப் பொழுதும் துயிலானாய், விரைமலர் வாளியொடு கருப்புவில் ஏந்தி - மணம்பொருந்திய
மலராகிய அம்பையும் கரும்பாகிய வில்லையும் ஏந்தி, மகர வெல் கொடி மைந்தன் திரிதர
- மகரமாகிய வெற்றிக்கொடியையுடைய காமதேவன் திரிந்துகொண்டிருத்தலால், நகரம் காவல்
நனி சிறந்தது என் - நகரம் மிகவும் காவல் சிறந்ததென்க.
புள்வாய் - வாய் என்பது ஒலிக்காயிற்று.
வாரணத்து என் பதில் அத்துச்சாரியை தவிர்வழி வந்தது. உரவு நீர்ப் பரப்பு - கடல்
; இன், உவமப் பொருட்டு. ஊர், ஆகுபெயர். எடுப்பி - எழுப்பி ; 1சூத
ரேத்திய துயிலெடை நிலையும்'' என்பது காண்க. இரவுத் தலைப்பெயரும் எனத் தகரவொற்று
மிக்கது விகாரம். தலைப் பெயர்தல், ஒரு சொல் ; அவ்விடத்தினின்றும் நீங்கும் என்றுமாம்.
இருளையுடைய அரையாமம் என இயைக்க. அடியார்க்கு நல்லார் அரையிருளும் யாமமும் என விரித்து,
'அரையிருள் - இரண்டாம் யாமம் ; யாமம் - ஓர் யாமம் ; பகல் - அரையாமம்' என்பர்
; பொருந்துமேற் கொள்க. பகல் - ஒரு மாத்திரைப் பொழுதென்க. 2'கைச்சிலை
கணையோ டேந்திக் காமனிக் கடையைக் காப்பான்'' என்றார் திருத்தக்க தேவரும். துஞ்சார்
என்று பாடமோதித் துஞ் சாராம்படி என்றுரைப்பார் அடியார்க்கு நல்லார், என், அசை.
மாதவியும் கண்ணாரும் களித்துயிலெய்தவும்,
கண்ணகியும் பிரிந்த மாதரும் துயில்பெறாது கண் முத்துறைப்பவும், பாட, விழிப்ப, ஆர்ப்ப,
வைகறைகாறும் யாமத்தும் பகலுந் துஞ்சா னாகி மைந்தன் ஏந்தித் திரிதலால், நகரங்காவல்
சிறந்த தென்க. இஃது எல்லாவடியும் அளவடியாகி முடிந்தமையின் நிலைமண்டில ஆசிரியப்பா.
|