விரவப்பெற்றதும் பொருள் தொடர்ந்து செல்வதுமாகலின் இய லிசை நாடகப் பொருட்டொடர்நிலைச்
செய்யுள் எனவும், 'உரைச் செய்யுளும் இசைப்பாட்டும் இடையிடை விரவப்பெற்றதாகலின்
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனவும், பல கூத்துக் களும் அவற்றிற்குரிய பாட்டுக்களும்
இடையிடை அமைந்திருந்த லின் நாடகக் காப்பியம்' எனவும் கூறப்பெறும். சிலப்பதிகாரத்தில்
வந்துள்ள உரைச்செய்யுள்களைத் தொல்காப்பியர் கூறிய உரைவகை நான்கனுள் (தொல்,
செய், 173) பாவின்றெழுந்த கிளவி என்பதில் அடக்குவர் இளம்பூரணர்; பாட்டிடைவைத்த
குறிப்பு என்பதில் அடக்குவர் நச்சினார்க்கினியர். பின்னவர், எண்வகை வனப்பினுள்
தொன்மை என்பதற்குப் பெருந்தேவனார் செய்த பாரதம், தகடூர் யாத்திரை என்பவற்றோடு
சிலப்பதிகாரத்தையும் (தொல், செய், 237.) எடுத்துக் காட்டியிருப்பது கருதற்பாலது.
இயற்றமிழ் போலவே இசை நாடகங்களும்
தமிழின்கண் பண்டு பெருக்கமடைந்திருந்தன; சிறப்பியல்புகள் உடையனவாயு மிருந்தன. அவ்வியல்பு
பற்றியே முத்தமிழ் என்ற வழக்கு உளதா யிற்று. அடியார்க்குநல்லார் உரைப்பாயிரத்தில்
"இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும், தேவ விருடி நாரதன் செய்த பஞ்ச
பாரதீய முதலாவுள்ள தொன்னூல்களுமிறந்தன; நாடகத் தமிழ் நூலாகிய பரதம் அகத்தியம்
முதலாவுள்ள தொன் னூல்களுமிறந்தன; பின்னும் முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றிய மென்பவற்றுள்ளும்
ஒரு சார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணை யல்லது முதல் நடு இறுதி காணாமையின் அவையும்
இறந்தன போலும்" எனவும், "தேவ விருடியாகிய குறுமுனிபாற் கேட்ட மாணாக்கர் பன்னிருவருட்
சிகண்டி யென்னும் அருந்தவமுனி...செய்த இசை நுணுக்கமும். பாரசவ முனிவரில் யாமளேந்திரர்
செய்த இந்திர காளியமும், அறிவனார் செய்த பஞ்சமரபும். ஆதிவாயிலார் செய்த பரத
சேனாபதீயமும், கடைச்சங்க மிரீஇய பாண்டியருட் கவியரங் கேறிய பாண்டியன் மதிவாணனார்
செய்த முதனூல்களிலுள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க் கூத்தியன்ற மதிவாணர்
நாடகத்தமிழ் நூலும் என இவ்வைந்தும் இந்நாடகக் காப்பியக் கருத் தறிந்த நூல்களன்றேனும்
ஒருபுடை யொப்புமை கொண்டு முடித் தலைக் கருதிற்று இவ்வுரையெனக் கொள்க" எனவும் உரைத்தவை
அறியற்பாலன. அடியார்க்கு நல்லார் தாம் உரையெழுதுதற்குக் கருவியாகக் கொண்ட நூல்களுள்
இசை நுணுக்கத்தை அகத்தியர் மாணாக்கராகிய சிகண்டியார் இயற்றியதென்றும், மதிவாணர்
நாடகத் தமிழ்நூலைக் கடைச்சங்கத்துட் கவியரங்கேறிய பாண்டி
|