பக்கம் எண் :

7. கானல்வரி






215

[ 38 ]

வாரித் தரள நகைசெய்து வண்செம் பவள
                      வாய்மலர்ந்து
சேரிப் பரதர் வலைமுன்றில் திரையு லாவு
                      கடற்சேர்ப்ப
மாரிப் பீரத் தலர்வண்ண மடவாள் கொள்ளக்
                      கடவுள்வரைந்து
ஆர்இக் கொடுமை செய்தாரென் றன்னை அறியின்
                      என்செய்கோ.



212
உரை
219

         வாரித் தரள நகை செய்து - கடல் முத்தாகிய நகையினைத் தோற்றி, வண் செம்பவள வாய் மலர்ந்து - அழகிய சிவந்த பவளமாகிய வாய் திறந்து, சேரிப் பரதர் வலை முன்றில் திரை உலாவு கடற் சேர்ப்ப - பரதர் சேரியில் வலை உணங்கும் மனை முற்றத்தே அலைகள் உலாவும் கடலின் கரையையுடைய தலைவனே, மாரிப் பீரத்து அலர் வண்ணம் மடவாள் கொள்ள - தலைவியானவள் மாரிக்காலத்து மலரும் பீர்க்கின் மலர் போலும் நிறத்தைக் கொள்வாளாயின், கடவுள் வரைந்து - தெய்வத்தை வழிபட்டு, ஆர் இக் கொடுமை செய்தார் என்று அன்னை அறியின் - இக் கொடுமை செய்தவர் யாரென்று அன்னை ஆராய்ந்தறியின், என் செய்கோ - என்ன செய்வேன் ;

         பீரத்து - பீர் அத்துச் சாரியை பெற்றது ; இதனை 1"ஆரும் வெதிரும்" என்னுஞ் சூத்திரத்து, மெய் பெற என்றதனான் முடிப்பர். வண்ணம் - பொன்னிறம் ; பசலை. வரைந்து - வழிபட்டு, அறியின் - ஆராய்ந்தறியினென்க.


1 தொல். எழுத்து. 363.