கதிரவன்
மறைந்தனன் - சூரியன் மறைந்தான், கார் இருள் பரந்ததுவே - கரிய இருள் பரந்தது, எதிர்
மலர் புரை உண்கண் எவ்வ நீர் உகுத்தனவே - செவ்வி மலரை யொக்கும் மையுண்ட கண்கள்
துன்பத்தாலாய நீரைச் சொரிந்தன, புது மதி புரை முகத்தாய் - புதிய மதியை யொக்கும்
முகத்தினையுடையாய், போனார் நாட்டு உளதாங் கொல் - நம்மை விட்டுப் போன தலைவரது
நாட்டிலும் உண்டாகுமோ, மதி உமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த இம் மருள் மாலை - திங்களை
உமிழ்ந்து ஞாயிற்றை விழுங்கி வந்த இந்த மயங்கிய மாலைப் பொழுது ;
எதிர்மலர் - தோற்றுகின்ற மலரென்றும்,
எதிர்த்துப் பிணைத்த மலரென்றுமாம். புது மதி - மாலையிற் றோற்றிய நிறைமதி. கதிர்
விழுங்கி மதி யுமிழ்ந்து என மாறுதலுமாம். மாலையிலே கதிர் மறைந்ததனையும், மதி தோன்றியதனையும்
இங்ஙனங் கூறினார். ஒன்றை விழுங்கி, ஒன்றை உமிழ்ந்ததென்பது ஓர் நயம்.
|