பக்கம் எண் :

8. வேனிற் காதை

 

 

வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி
இடக்கை நால்விரல் மாடகந் தழீஇச

27
உரை
28

         வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி - வலக்கையைப் பதாகையாக் கோட்டின் மிசையே வைத்து, இடக்கை நால் விரல் மாடகம் தழீஇ - இடக்கை நால்விரலால் மாடகத்தைத் தழுவி ;
        பதாகைக் கையாவது பெருவிரல் குஞ்சித்து ஒழிந்த விரலெல்லாம் நிமிர்த்தல். மாடகம் - நரம்பினை வீக்குங் கருவி.