5 |
மாலதி மாற்றாள் மகவுக்குப்
பாலளிக்கப்
பால்விக்கிப் பாலகன் றான்சோர மாலதியும் |
|
மேல்
ஓர் நாள் - முன்னொரு நாளிலே, மாலதி - மாலதியென்னும் பெயருடைய ஓர் பார்ப்பனி, மாற்றாள்
மகவுக்குப் பால் அளிக்க - தனது மாற்றாளின் குழவிக்குத் தன் முலை சுரந்த பாலைச் சங்கால்
ஊட்ட, பால் விக்கிப் பாலகன் தான் சோர - அப் பால் விக்குதலாலே அக் குழவி மரிக்க
;
மேலோர்
நாள் என்பது தொடங்கிக் கண்ணகியின் பார்ப்பனத் தோழியாகிய தேவந்தியின் வரலாறு
கூறுகின்றார். மாற்றாள் - கணவனுடைய மற்றொரு மனைவி ; சக்களத்தி. மாற்றாள் இல்லாத
பொழுது குழவி யழுதமையாற் பாலளித்தாளென்க. பால்-ஆன் பாலுமாம். பாலகன் என்பது காலவழக்கு.
சோர்தல் - ஈண்டு மரித்தல். மேலை நாள் என்றும் பாடம். |
|
|