இந்நூலின் புகார்க் காண்டம் மூலம் சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழாசிரியராக
விருந்த ஸ்ரீநிவாச ராகவாசாரியார் அவர்களாலும், புகார்க் காண்டம் மூலமும் உரையும் சோடசாவ
தானம் சுப்பராய செட்டியாரவர்களாலும் நெடுநாட்களின் முன்பே பதிப்பிக்கப் பெற்றனவேனும்
நூன் முழுதும் திருந்திய முறையில் பலவகை ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் மகாமகோபாத்தியாய,
டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்களாலேயே பதிப்பிக்கப்பெற்றது. ஜயரவர்கள் மூன்று
முறை இந்நூலை உரையுடன் அச்சியற்றி வெளியிட்டுள்ளார்கள். இந்நூலைப் பதிப்பித்தற்கு
அவர்கள் மேற் கொண்ட உழைப்பின் பெருமையானது அவர்கள் எழுதிய முகவுரை களாலும், வாழ்க்கை
வரலாற்றாலும் நன்கு புலப்படும். எத்த னையோ பல அரிய நூல்களை இங்ஙனம் ஆராய்ந்து
வெளியிட்ட அப்பெரியார்க்குத் தமிழுலகம் எஞ்ஞான்றும் கடமைப்பாடுடைய தாகும். இங்ஙனம்
ஐயரவர்கள் அச்சிட்ட பின்பும் சென்னைப் பல்கலைக் கழகத்தார் இந்நூலின் பகுதிகள்
பலவற்றைப் பீ. ஏ. வகுப்பிற்குப் பாடமாகத் தேர்ந்தெடுத்து அவற்றைக் குறிப்புரை யுடன்
வெளியிட்டுள்ளனர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தாரும் புகார்க் காண்ட மூலத்தைப் பதிப்பித்துள்ளனர்.
இந்நூலின் மூலமும் உரைகளும் ஐயரவர்களால்
பதிப்புத் தோறும் திருத்தம் பெற்றுளவேனும், அவை பின்னும் திருந்தவேண் டிய நிலையில்
இருந்தன வென்பது இப்புத்தகத்தின் 79, 200-ஆம் பக்கங்களிலுள்ள குறிப்புக்களால் அறியத்தகும்.
பாகனேரியிலுள்ள தன வணிகர் குலமணியும்
அளவு கடந்த தமிழ்ப் பற்றுடையாருமாகிய திருவாளர் வெ, பெரி, பழ. மு. காசி விசுவநாதன்
செட்டியாரவர்கள் சிலப்பதிகாரத்தில் பன்னிரண்டு உறுப்புக்கட்கு அடியார்க்கு நல்லார்
உரை இன்மையானும், அரும் பதவுரை கொண்டு நூற்பொருளை முற்றுவுணர்தல் கற்பார் யாவர்க்
கும் எளிதன்றாகலானும் நூன் முழுதுக்கும் ஒரு தன்மையாகத் தெளிந்த முறையில் ஓர் உரையெழுதுவித்து
வெளியிடுதல் நல மெனக் கருதி, உரையெழுதும் அப்பணியினை எனக்கு அளித்தனர். சிறந்த
நூல்களைக் குறைந்த விலையில் அச்சிட்டுப் பரப்ப வேண்டு மென்னும் பெருநோக்கங் கொண்டு
சில் யாண்டின்முன் அவர்கள் கலித்தொகையை அழகுறப் பதிப்பித்து வெளியிட்டதனை அனை
வரும் அறிவர். தமிழ் வளர்த்தலைக் கடனாகக் கொண்டுள்ள அப் பெருந்தகையின் விருப்பத்தை
நிறைவேற்றுங் கருத்தாலும், சில நூல்கட்கு உரையெழுதுதலை மேற்கொள்ளின் அது தலைக்கீடாகத்
தமிழ் நூல்களை நன்கு பயிலலாமென்னும் எண்ணத்தாலும் நூலின்
|