245
|
அறியா மையினின் றிழிபிறப் புற்றோர்
உறையூர் நொச்சி யொருபுடை யொதுங்கிப்
பன்னிரு மதியம் படர்நோ யுழந்தபின்
முன்னை யுருவம் பெறுகவீங் கிவரெனச்
சாபவிடை செய்து தவப்பெருஞ் சிறப்பின்
|
|
அறியாமையின்
இன்று இழி பிறப்பு உற்றோர் - தமது அறியாமை காரணமாக இன்று இழி பிறவி உற்ற இவர்கள்,
உறையூர் நொச்சி ஒரு புடை ஒதுங்கி - உறையூர் மதிற் புறமாகிய காவற் காட்டிற் றிரிந்து,
பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின் - பன்னிரண்டு திங்கள் நினைந்து வருந்தத் தக்க
துன்பத்தினான் வருந்திய பின்னர், முன்னை உருவம் பெறுக ஈங்கு இவர் எனச் சாபவிடை செய்து
- முன்னை வடிவத்தினை இவர் பெறுவாராக என்று சாபவிடை செய்து ;
நெடுங்காலம் தவஞ்செய்து பெற்ற மக்கட்
பிறப்பை ஒரு மொழியான் இழந்தனர் என்பது தோன்ற இழிபிறப்பு உற்றோர் என்றார். இதனானே
யா காவா ராயினும் நா காத்தல் இன்றியமையாதது என்பது பெறப்படும். |
|
|