பக்கம் எண் :


2. வேட்டுவ வரி


வழங்குவில் தடக்கை மறக்குடித் தாயத்துப்
பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி


6
உரை
7

       வழங்கு வில் தடக்கை மறக் குடித் தாயத்து - அம்பினை வழங்கும் வில்லை யேந்திய பெரிய கையையுடைய மறவர் குடியிற் பிறந்த உரிமையை உடைய, பழங்கடன் உற்ற முழங்கு வாய்ச் சாலினி - முன்பு நேர்ந்த கடனைக் கொடுத்துப் போந்த ஒலிக்கும் வாயினையுடைய தேவராட்டி ;

       வழங்கும் வில் - அம்பை வழங்கும் வில் என்க. தாயும் - உரிமை. முழங்கு வாய் - கொக்கரிப்பினையுடைய வாய். சாலினி - தேவராட்டி. பழங்கடன் - ஊரார் நேர்ந்த கடன்.