"வம்பலர் பல்கி.....சேர்த்துவாய்" வம்பலர் பல்கி வழியும் வளம்பட - வழிகளும்
ஆறுசெல்வோர் நிறையப் பெறுதலான் அவர்தம் பொருளாகிய வளம் உண்டாம் வண்ணம், அம்புடை
வல்வில் எயின் கடன் உண்குவாய் - அம்பு பொருந்திய வலிய வில் ஏந்திய மறவரது பலிக்
கடனை உண்பாயாக ; சங்கரி அந்தரி நீலி சடாமுடிச் செங்கண் அரவு பிறையுடன் சேர்த்து
வாய் - சங்கரி, அந்தரி, நீலி, சடைமுடிக்கண் சிவந்த கண்களையுடைய பாம்பினை இளம்
பிறையோடு சேர்த்துச் சூடுபவளே ;
சேர்த்துவாய் வழிவளம்பட எயின்
கடன் உண்குவாய் என்க. முன்னர்க் கொற்றவை கடன் கொள்ளாமையான், "மறக்குடித் தாயத்து
வழிவளஞ் சுரவாது" என்றாராகலான், ஈண்டு வழிவளம் படக் கடன் உண்குவாய் என்றார்.
வம்பலர் - புதியராய் வருபவர். சடாமுடி - வடசொன் முடிபு.
|