"துண்ணென்.....செய்குவாய்" துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு - கேட்டார் துண்ணென
நடுங்குமாறு ஒலி செய்யும் துடியுடனே பகைவர் உறங்குங் காலத்து ஊர்க் கொலை செய்யும்,
கண்இல் எயினர் இடுகடன் உண்குவாய் - கண்ணோட்ட மில்லாத மறவர் இடும் பலிக்கடனை
நீ உண்பாயாக ; விண்ணோர் அமுது உண்டும் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சு உண்டு இருந்து அருள்
செய்குவாய் - விண்ணவர் சாவா மருந்தாகிய அமுதமுண்டும் இறப்பவும் எத்தகையோரும் உண்ணவொண்ணாத
நஞ்சினை உண்டும் இறவாதே இருந்தருள்வாய் ;
இருந்து அருள் செய்குவாய்
கடன் உண்குவாய் என்க. துஞ்சூர் எறிதலை 1"ஊர் கொலை"
என்னும் வெட்சித்திணைத் துறையானறிக.
|