பக்கம் எண் :


3. புறஞ்சேரியிறுத்த காதை


175

புனல்யா றன்றிது பூம்புனல் யாறென
அனநடை மாதரும் ஐயனுந் தொழுது



174
உரை
175

    புனல் யாறு அன்று இது பூம்புனல் யாறு என - இவ் வியாறு நீர் ஆறு அன்று பூவாறு என்று புகழ்ந்து, அன நடை மாதரும் ஐயனும் தொழுது - அன்னம் போன்ற நடையினை யுடைய கண்ணகியும் கோவலனும் வணங்கி ;