பக்கம் எண் :


3. புறஞ்சேரியிறுத்த காதை


190

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரலென் பனபோல் மறித்துக்கை காட்டப்



189
உரை
190

        போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடுங்கொடி - பகைவர் வருந்தப் போர் தேய்த்தெடுத்த அரிய மதிலின்கண் நெடிய கொடிகள், வாரல் என்பனபோல் மறித்துக் கை காட்ட- இம் மதுரைக்கண் வாராதொழிவா யென்பன போலத் தம் கையின் மறித்துக் காட்ட ;

        ஆரெயில் நெடுங்கொடி மேல்காற்றடிக்க அசைகின்றவை கோவலனை இங்கு வாராதே போ என்று கை காட்டினாற் போன் றன ; தற்குறிப்பேற்றம்.

        1" ஈண்டுநீ வரினு மெங்க ளெழிலுடை யெழிலி வண்ணன் பாண்டவர் தங்கட் கல்லாற் படைத்துணை யாக மாட்டான் மீண்டுபோ கென்றென் றந்த வியன்மதிற் குடுமி தோறும் காண்டகு பதாகை யாடை கைகளாற் றடுப்ப போன்ற"

       என்னுஞ் செய்யுள் இக் கருத்தைப் பின்பற்றியதாதல் காண்க.

1 வி. பாரதம். வாசுதேவனை. 6.