பக்கம் எண் :


முகவுரை

        ஆயின், இதன்கணுள்ள இசை நாடகப் பகுதிகள் யாவும் நன்கு விளக்கப்பட்டன வென்றல் சாலாது. அவற்றை அறிதற் குக் கருவியாகிய நூல்கள் இறந்தொழிந்தமையின் பழைய உரை யாசிரியர்களே பலவற்றை விளக்காது சென்றனர். அரங்கேற்று காதையில் யாழாசிரியன் அமைதி கூறுமிடத்து "வன்மையிற் கிடந்த.........வயிற் சேர" (72--8) என்பதற்கு உரை கூறு மிடத்தே, "தார பாகமுங் குரலின் பாகமும், நேர்நடு வண்கிளை கொள்ள நிற்ப, முன்னர்ப் பாகமும் பின்னர்ப் பாகமும், விளரி குரலாகு மென்மனார் புலவர்' என்னுஞ் சூத்திரத்தின் விதிபற்றி வட்டப்பாலையின் முடிவு தானமாய் வலிந்த நிலைமையினையுடைய தாரம் பெற்ற இரண்டலகில் ஓரலகையும், இப் பாலையின் முதல் தானமாய் மெலிவினிற்கும் குரல் நரம்பு பெற்ற நாலலகில் இரண் டலகையும் தார நரம்பில் அந்தரக் கோலிலே கைக்கிளையாக நிறுத்தத் தாரந்தான் கைக்கிளையாயிற்று. அந்த நரம்பில் ஒழிந்த ஓரலகையும் பண்டை விளரியிலே கூட்ட அவ்விளரி துத்த நரம் பாயிற்று. இப்படிப் பன்னிருகாற் றிரிக்கப் பன்னிருபாலையும் பிறக்கும். பன்னிரு பாலையினுரு தொண்ணூற்றொன்றும் பன்னி ரண்டுமாய்ப் பண்கள் நூற்று மூன்றாதற்குக் காரணமாமெனக் கொள்க" என்றுரைத்தனர் அரும்பதவுரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும்.

        ஆயின் அவர்கள் பன்னிருபாலையாவன இவையெனப் பெயர் கூறிற்றிலர்; பண்கள் நூற்றுமூன்றாதலை விளக்கிற்றுமிலர். அடி யார்க்கு நல்லார் வேனிற் காதையில் "குரல்வாயிளிவாய்க் கேட்ட னள்" (95) என்பதே பற்றுக்கோடாகச் செம்பாலை முதலிய ஏழ் பெரும் பாலையும் பிறக்குமாறு கூறி, 'இவ்வேழு பெரும்பாலையினை யும் முதலடுத்து நூற்று மூன்று பண்ணும் பிறக்கும்' என்றார். மற்றும் அவர், புறஞ்சேரியிறுத்த காதையில், "பாய்கலைப் பாவை பாடற் பாணி, ஆசான் றிறத்தி னமைவரக் கேட்டு" (111-2) என்ப தற்கு, 'சதிபாய்ந்து செல்லும் கலையையுடைய பாவைபோல்வாளது பாடற் பண்ணை ஆசானென்னும் பண்ணியலாகிய நால்வகைச் சாதி யினும் பொருந்துதல் வரச் செவிப்புலத்தானறிந்து' எனப் பொருள் கூறி, "ஆசான் சாதி நால்வகையாவன: ஆசானுக்கு அகச்சாதி காந் தாரம், புறச்சாதி சிகண்டி, அருகுசாதி தசாக்கரி, பெருகுசாதி சுத்த காந்தாரமெனக் கொள்க. பண் நூற்றுமுன்று அவை நால்வகைப் படும். பண், பண்ணியல், திறம், திறத்திறமென; அவற்றுள் இது திறங்கூறிற்று' என விளக்கமுரைத்தனர். இவ்வீரிடத்தும் பண் நூற்று மூன்றாதலை விளக்கிற்றிலரேனும் இவ்விடங்களிற் காட்டிய