பக்கம் எண் :


4. ஊர்காண் காதை

ஒருமைத் தோற்றத் தைவேறு வனப்பின்
இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்



191
உரை
192

       ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் - ஒன்று பட்ட பிறப்பினையும் வேறுபட்ட ஐந்து வனப்பினையுமுடைய. இலங்கு கதிர் விடூஉம் நலம்கெழு மணிகளும் - விளங்கும் ஒளிவிடா நின்ற நன்மை பொருந்திய மாணிக்கம் புருடராகம் வயிடூரியம் நீலம் கோமேதகம் என்னும் மணிகளும் ;

       சாதியும் அனையவும் உருவவும் அனையவும் இருவேறுருவவும் ஆகிய ஐவேறுவனப்பின் மணிகளும் என்க.