பக்கம் எண் :


4. ஊர்காண் காதை



195

காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும்
தோற்றிய குற்றந் துகளறத் துணிந்தவும்
சந்திர குருவே அங்கா ரகனென
வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்



193
உரை
196

       காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும் தோற்றிய குற்றம் துகள்அறத் துணிந்தவும் - காற்று மண் கல் நீர் என்பவற்றாலுண்டாய குற்றம் சிறிதும் இன்மையாலே தெளிந்த ஒளியுடையனவும், சந்திரகுருவே அங்காரகன் என வந்த நீர்மைய வட்டத் தொகுதியும் - வெள்ளியும் செவ்வாயும் போல வெண்ணீர்மை செந்நீர்மையுடையனவும் திரட்சியுடை யனவுமாகிய முத்து வருக்கமும் ;

       காற்றேறு மண்ணேறு கல்லேறு நீர்நிலையென்பன குற்றங்கள் பலவற்றுள்ளும் மிக்கன எனவும், வெள்ளி செவ்வாய் நீர்மை குணங்கள் பலவற்றுள்ளும் மிக்கன எனவுங் கொள்க. சந்திரகுரு - வெள்ளி ; வியாழன் என்றல் புராணத்திற்கொத்தது. அங்காரகன் செவ்வாய். வட்டத்தொகுதி - ஆணிமுத்தென்பர் அரும்பத வுரையாசிரியர்.