பக்கம் எண் :

5. அடைக்கலக் காதை

  தாழ்நீர் வேலித் தலைச்செங் கானத்து
நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை
மாமறை முதல்வன் மாடலன் என்போன்


11
உரை
13

       தாழ் நீர் வேலித் தலைச்செங்கானத்து - தாழ்ந்த நீரை வேலியாகவுடைய தலைச்செங்காடு என்னும் ஊரிடத்துள்ள, நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை-நான்கு வேதங்களையும் முற்ற உணர்ந்த நன்மையை விரும்பிய கோட்பாட்டினையுடைய, மாமறை முதல்வன் மாடலன் என்போன் - மறையவர் தலைவனாகிய மாடலன் எனப்படுவோன் ;

தாழ்தல் - ஆழமாதல்; தங்குதல் என்றுமாம். தாழ்நீர் - கடல்; கிடங்குமாம்.