45
|
ஞான நன்னெறி நல்வரம்
பாயோன்
தானங் கொள்ளுந் தகைமையின் வருவோன்
தளர்ந்த நடையில் தண்டுகா லூன்றி
வளைந்த யாக்கை மறையோன் றன்னைப்
பாகுகழிந் தியாங்கணும் பறைபட வரூஉம்
வேக யானை வெம்மையிற் கைக்கொள |
|
ஞான
நல்நெறி நல் வரம்பு ஆயோன் - வீடு சேறற்கு நல்ல நெறியாகிய ஞானத்திற்குச் சிறந்த
எல்லையாயுள்ளோன், தானம் கொள்ளும் தகைமையின் வருவோன் தளர்ந்தநடையில் தண்டுகால்
ஊன்றி - தானத்தைப் பெறும் தகுதியோடு தளர்ந்த நடையுடன் ஊன்றுகோலையே காலாக ஊன்றி
வருவோனாகிய, வளைந்த யாக்கை மறையோன் தன்னை - கூனிய உடம்பினை யுடைய அந்தணனை, பாகு
கழிந்து யாங்கணும் பறை பட வரூஉம் வேக யானை - பாகர் செயலைக் கடந்து எவ்விடத்தும்
பறை கொட்ட வருகின்ற மதவேகத்தினையுடைய யானை, வெம்மை யில் கைக்கொள - சினத்தால்
பற்றிக்கொண்டதாக ;
1"தளர்ந்த
நடையிற் றண்டுகால் ஊன்றி, வளைந்த யாக் கையோர் மறையோன்" என்பர் மணிமேகலையினும்,
பாகு - பாகர். கழிந்து என்றது அவர்க்கு அடங்காமை கூறிற்று. பறைபடுதல் மக்கள் அறிந்து
காத்தற்கு.
பொழியக் கொள்ளும் தகைமையின் வருவோனாகிய
மறை யோன் தன்னை யானை கைக்கொள என்க. |
1
மணி, 14 : 30--1.
|
|
|