195
|
சாரணர் கூறிய தகைசால்
நன்மொழி
ஆரணங் காக அறந்தலைப் பட்டோர்
அன்றப் பதியுள் அருந்தவ மாக்களும்
தன்தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும்
இட்ட தானத் தெட்டியும் மனைவியும்
முட்டா இன்பத்து முடிவுல கெய்தினர |
|
சாரணர்
கூறிய தகைசால் நன்மொழி - சாரணர் மொழிந்த தகுதி யமைந்த நல்ல அறவுரையை, அன்று -
அந் நாளில், ஆர் அணங்கு ஆக அறந்தலைப்பட்டோர் - மறை மொழியாகக் கொண்டு அறத்துவழி
நின்றோராகிய, அப் பதியுள் அருந்தவ மாக்களும் - அந் நகரத்துக்கண் அரிய தவமுடையோரும்.
தன்தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும் - தனக்கென வாழாத வாழ்க்கையினையுடைய உலக நோன்பிகளும்,
இட்ட தானத்து எட்டியும் மனைவியும் - தானம் செய்த சாயலனும் அவன் மனைவியும், முட்டா
இன்பத்து முடிவுலகு எய்தினர் - குறைவிலா இன்பத்தினையுடைய வீட்டுலகத்தினை அடைந்தனர்
;
ஆரணங்காக என்பதற்குத் தெய்வத் தன்மையோடு
கூடியதாக எனலுமாம் . தன் தெறல் வாழ்க்கை - தான் என்னுந் தன்மையைக் கெடுத்த வாழ்க்கை
; தனக்கெனவாழாது பிறர்க்கென வாழும் வாழ்க்கை. இட்ட தானம் - குரங்கின் பொருட்டுச்
செய்த தானம். முட்டா இன்பம் - தடையிலா இன்பம், நிறைந்த இன்பம். வீட்டுலகினும்
முடிவான வேறு உலகம் இன்மையான் அவ்வுலகு முடிவுலகு எனப்பட்டது. இது தானத்தின் சிறப்பிற்கு
மேற்கோளாகும். |
|
|