5
|
அளைவிலை யுணவின் ஆய்ச்சியர் தம்மொடு
மிளைசூழ் கோவலர் இருக்கை யன்றிப்
பூவ லூட்டிய புனைமாண் பந்தர்க்
காவற் சிற்றிற் கடிமனைப் படுத்துச்
|
|
அளை விளை உணவின் ஆய்ச்சியர் தம்மொடு - மோரினை விற்றுப் பெறும்
பொருளால் உண்டு வாழும் வாழ்க்கையினையுடைய இடைச்சியரோடு, மிளை சூழ் கோவலர் இருக்கை
அன்றி - கட்டு வேலி சூழ்ந்த இடையர்களது இருக்கைக்கண் அன்றி, பூவல் ஊட்டிய புனை மாண்
பந்தர்க் காவற் சிற்றில் கடி மனைப் படுத்து - அழகு மாட்சிமைப்பட்ட பந்தரினையும்
காவலினையுமுடைய செம்மண் பூசிய சிறு வீடாகிய விளக்க மமைந்த மனைக்கண் சேர்த்து
; மிளை கோவலரிருக்கைக்கும், காவல் மனைக்கும் கொள்க, பூவல் - செம்மண் ; 1
"இல்பூவலூட்டி" என்றார் பிறரும். கடி-விளக்கம். |
1
கலி. 104
|
|
|