யன மதிவாணனார் இயற்றியதென்றும் கூறிவைத்து, அந்நூல்கள் இந் நாடகக்காப்பியக் கருத்தறிந்த
நூல்களன்றென வுரைப்பது தகுதியெனத் தோன்றவில்லை. அவை கடைச்சங்க காலத்தின் பின்பு
தோன்றிய நூல்களாயின் பொருந்தும். அந்நூல்கள்தாமும் பின் னர் என்னாயினவோ அறியோம்.
பழைய நாளில் இசைத்தமிழும் நாடகத்தமிழும் மிக உயரிய நிலையில் இருந்தமைக்குச் சிலப்பதி
காரமே இப்பொழுது சான்றாகவுள்ளது. அக்காலத்து வழங்கிய இசைநாடகப் பகுதிகளை யெல்லாம்
துறைபோகக்கற்று, அவற்றைத் தம் காப்பியத்தில் ஏற்றபெற்றி யமைத்துத் தமிழருடைய
பழைய கலை நாகரிகத்தை இறவாமற் பாதுகாத்த பெருமை இளங்கோவடி கட்குரியது.
இச்சிலப்பதிகாரம், இதனை இளங்கோவடிகள்
இயற்றியதற் குரிய காரணத்தைப் புலப்படுத்திக் கதையைத் தொகுத்துரைப்ப தாகிய பதிகச்செய்யுளை
முதலிற்கொண்டு, மங்கல வாழத்துப்பாடல் முதலிய பத்துறுப்புக்களையுடைய புகார்க் காண்டமும்,
காடுகாண் காதை முதலிய பதின்மூன்று உறுப்புக்களையுடைய மதுரைக் காண்டமும், குன்றக்குரவை
முதலிய ஏழுறுப்புக்களையுடைய வஞ்சிக் காண்டமுமாகப் பகுக்கப்பெற்றுள்ளது. இயற்றமிழ்ப்
பகுதிய வாகிய ஆசிரியப்பா, கலிப்பா என்பவற்றாலும், இசைத்தமிழின் பாற்படும் ஆற்று
வரி, ஊசல் வரி, கந்துக வரி முதலியவற்றாலும், நாடகத்திற்குரிய கட்டுரை உரைப்பாட்டுக்களாலும்
இவ்வுறுப்புக் கள் அமைந்துள்ளன. கந்துக வரி முதலியன நாடகத்திற்கு முரிமை யுள்ளனவாம்.
இயற்றமிழ்ப்பாவாகிய வெண்பா சில கலிப்பாக் கட்கு உறுப்பாகவே வந்துள்ளன. காதை
அல்லது பாட்டுக்களின் இறுதியில் தனித்து நிற்கும் வெண்பாக்களும் சிலவுள்ளன.
புகார்க் காண்டத்திலே அரங்கேற்று
காதையில் ஆடலாசிரியன், இசையாசிரியன், கவிஞன், தண்ணுமையாசிரியன், குழலாசிரியன்,
யாழாசிரியன் என்போர் இயல்புகளும், அரங்கின் அமைதி, அரங்கிற் புகுந்து ஆடுமியல்பு
என்பனவும் கூறும் வாயிலாக இசை நாடகங் களின் இலக்கணங்கள் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன.
அவற் றுள்ளும் யாழாசிரியன் அமைதி கூறுமிடத்துத் தமிழுக்குரிய ஏழ் பெரும்பாலைப்பண்கள்
தோன்றும் முறைமையும், அவற்றைத் தோற்றுவிக்கும் ஏழ் நரம்பு (ஸ்வரங்)களின் தமிழ்ப்
பெயர்களும் விளக்கமாகக் கூறப்பெற்றுள்ளன. மற்றும் கானல்வரியில் "சித் திரப் படத்துட்புக்கு......செவியினோர்த்து"
என்னும் பகுதியிலும், "ஆங்ஙனம் பாடிய," "நுளையர் விளரி" என்னும் பாக்களிலும். வேனிற்காதையில்
"அதிராமரபின் யாழ்கை வாங்கி...... முறையுளித்
|