170
|
மருந்திற் பட்டீ ராயின் யாவரும்
பெரும்பெயர் மன்னனிற் பெருநவைப் பட்டீர்
|
|
மருந்திற் பட்டீர் ஆயின் யாவரும் பெரும் பெயர் மன்னனிற் பெரு நவைப் பட்டீர் - இவன்
மருந்தின்கண் அகப் பட்டீராயின் நீவிர் யாவிரும் பெரிய புகழையுடைய அரசனால் கடுந்தண்டத்தினை
அடைந்தீர் ;
மருந்திற் பட்டீராயின் என்றது, முன்னர்
இலக்கணமுறைமையின் கொலைப்படுமகனலன் எனக் கூறியதனை உட்கொண்டது. நவை - துன்பம் ;
தண்டம். நவைப் பட்டீர்; துணிவு பற்றி இறந்த காலத்தாற் கூறினான்.
இனி, மந்திர முதலிய எட்டன் விளைவு கூறவான்:- |
|
|