பக்கம் எண் :


9. ஊர்சூழ் வரி





30
என்பன சொல்லி இனைந்தேங்கி யாற்றவும்
வன்பழி தூற்றுங் குடியதே மாமதுரைக்
கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்டச்

செம்பொற் கொடியனையாள் கண்டாளைத் தான்காணான்
மல்லன்மா ஞாலம் இருளூட்டி மாமலைமேற்
செவ்வென் கதிர்சுருங்கிச் செங்கதிரோன் சென்றொளிப்பப


27
உரை
32

       என்பன சொல்லி இனைந்து ஏங்கி - என்றின்னவற் றைச் சொல்லி வருந்தி ஏங்க, ஆற்றவும் மன்பழி தூற்றுங் குடி யதே மா மதுரைக் கம்பலை மாக்கள் கணவனைத் தாம் காட்ட - அரசன் கோல் கோடினமையான் அவனை மிகவும் பழிதூற்று கின்ற குடியினை யுடைத்தாகிய மதுரைக்கண் உள்ள கம்பலை மாக்கள் சிலர் அவள் கணவனை அவட்குக் காட்ட, செம்பொற் கொடியனையாள் கண்டாளைத் தான்காணான் - அவனைக் கண்ட சிவந்த பொன்னாலாய கொடி போன்றவளைத் தான் காணப் பொறானாய், மல்லல் மா ஞாலம் இருளூட்டி மா மலைமேல் செவ் வென் கதிர் சுருங்கிச் செங்கதிரோன் சென்று ஒளிப்ப - வளம் நிறைந்த பெரிய உலகிற்கு இருளை ஊட்டிக் கரிய மேற்கு மலை யின்கண் தனது சிவந்த கதிர்களைச் சுருக்கிக்கொண்டு ஞாயிறு சென்று மறைய ;

       என்பன சொல்லி என்றது களையாத துன்பம் என்பது முதலாகச் சொல்லியவற்றை. ஏங்கி - ஏங்கவெனத் திரிக்க. மதுரையா ரெல்லாரும் சொல்லி இனைந்து ஏங்க என்க. பழி தூற்றல் குடியின் தொழில். ('வன்பழி' என்ற பாடத்திலும் 'மன்பழி' என்ற பாடமே சிறந்ததாகத் தோன்றுகிறது) கம்பலை மாக்கள் - வேறு சில காட்சி கண்டு திரியுமவர் என்ப ; கம்பலை - ஒலி. தான் என்றது செங்கதி ரோனை ; அவன், தன் இறந்த கணவனை நோக்கி வருந்தும் கண்ணகி யைக் காணப் பொறாது மலையில் மறைந்தான் என்றார். இனி, தான் காணான் என்றதற்குக் கோவலன் இறந்தமையான் அவளைக் காணா னாயினான் எனவும் உரைப்ப ; அது பின்னர் வருகின்றது. சுருக்கி எனற்பாலது சுருங்கி என்றாயிற்று.