|
புல்லென் மருள்மாலைப்
பூங்கொடியாள் பூசலிட
ஒல்லென் ஒலிபடைத்த தூர் |
|
புல்லென்
மருள் மாலைப் பூங்கொடியாள் பூசலிட ஒல் லென் ஒலி படைத்தது ஊர் - அங்ஙனம் அவன் மறைதலானே
புல்லென்ற மருட்சியையுடைய மாலைக் காலத்தே பூத்துஉதிர்த்த கொடிபோன்ற கண்ணகி தன்
கணவனிடத்திருந்து அழுது அரற்றலான் அவ்வூர் ஒல்லென்னும் ஒலியினைப் படைத்தது ;
சிறிது காலமே நிற்றலான் புன்மை உடைத்தாயிற்று
; புற் கென்ற நிறமுமாம். இரவென்றும் பகலென்றும் துணியலாகாது மயங்குதற்கேதுவாகிய மாலையென்க.
ஒல்லென், ஒலிக்குறிப்பு. |
|
|