பக்கம் எண் :

10. வழக்குரை காதை



65
கண்ணகி யென்பதென் பெயரேயெனப், பெண்ணணங்கே
கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று
வெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழை

63
உரை
65

      பெண்ணணங்கே - அணங்குபோலும் பெண்ணே, கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று வெள்வேல் கொற்றம் காண் என - கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோன்மைப் பாற்பட்டதன்று மேலும் அதுவே அரச நீதியுமாகும் என்று அரசன் கண்ணகியிடம் கூற ;
      கொற்றம் - அரச நீதி. காண், முன்னிலையசை.