45
|
யானமர் காதலன் தன்னைத்
தவறிழைத்த
கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று
இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டா ளெறிந்தாள் விளங்கிழையாள் வட்டித்த |
|
யான்
அமர் காதலன் தன்னைத் தவறு இழைத்த - யான் விரும்பிய என் காதலனைக் கொலை செய்த,
கோ நகர் சீறினேன் குற்றமிலேன் யான் என்று - மன்னனது நகரத்தினை வெகுண்டேன் அச்
சீற்றத்தால் யான் குற்றமுடையே னல்லேன் என்று கூறி, இட முலை கையால் திருகி - இடப்
பக்கத்து முலையினை வலக்கையால் திருகி, மதுரை வலமுறை மும்முறை வாரா அலமந்து - மதுரை நகரத்தினை
வலமாக மூன்று முறை வந்து மயங்கி, மட்டு ஆர் மறுகின் மணி முலையை வட்டித்து விட்டாள் எறிந்தாள்
விளங்கு இழையாள் - விளங்கிய அணி யினையுடையாள் தன் அழகிய அம் முலையினைச் சூளுற்றுத்
தேன் நிறைந்த மறுகின்கண் விட்டெறிந்தாள் ;
தவறு - கொலை. கோ நகர் - அரசன்
தலைநகர். அலமந்து - சுழன்று, மயங்கி. வட்டித்தல் - பிரதிக்கினை செய்தல்; சுழற்றுதல்
எனலுமாம். விட்டாள் ; முற்றெச்சம். விளங்கிழையாள் குற்ற மிலேன் யானென்று திருகி
வாரா அலமந்து வட்டித்து எறிந்தாள் என்க. |
|
|