பக்கம் எண் :

18

களையே கூறினார். மகளிரை ஆடவர் தோள்களே பெரிதும் கவரும்
இயல்புடையன என்பதனை,

      “நோக்கிய நோக்கெனும் நுதிகொள் வேலிணை
       ஆக்கிய மதுகையான் றோளி லாழ்ந்தன
       வீக்கிய கனைகழல் வீரன் செங்கணும்
       தாக்கணங் கனையவ் டனத்திற் றைத்தவே”  --மிதிலைக், 39


எனவரும் இராமாவதாரத்தானும் உணர்க.

     வலத்தோளும் இடத்தோளுமாய் வேறுபட்டிருத்தலின் மாறுகொள்
மந்தரம் என்றார். மந்தரம் - மந்தரமலை. மரகதம் - ஒரு மணி; மரக
தத்தாலியன்ற எழு. வீங்கெழு என்று தனித்தனி கொள்க. எழு - தூண்.
பாறு - கழுகுமாம். உளி: ஏழாவதன்சொல் லுருபு. பறிப்பறி - பிடுங்கிப்
பிடுங்கி என்றவாறு. பறித்தல் - பிடுங்குதல். என்னோ என்னும் வினா
ஒன்று மில்லை என்பது படநின்றது.                         (12)

       இதுவுமது

13.
உறுப்புக் கடாமுடன் கூடி
   யொன்றா யிருந்த பெரும்பை
மறைப்பில் விழைவிற்குச் சார்வாய்
   மயக்குவ தேலிவ் வுறுப்புக்
குறைத்தன போல வழுகிக்
   குறைந்து குறைந்து சொரிய
வெறுப்பிற் கிடந்த பொழுதின்
   வேண்டப் படுவது முண்டோ.

      (இ - ள்.) உறுப்புக்கள் தாம் உடன்கூடி ஒன்றாய் இருந்த பெரும்பை -
கால்கை முதலிய புறத்துறுப்புக்களும் குடர் காற்றுப்பை முதலிய
உள்ளுறுப்புக்களும் ஒருசேர ஓருடம்பாக இருந்த இந்தத் தோலாலியன்ற
பெரிய பையானது; மறைப்பில் - மேலே தோல் போர்த்துள்ள மறைப்பினாலே;
விழைவிற்குச் சார்வாய் மயக்குவதேல் - நந்தம் அவாவிற்குச் சார்பிடமாகி
நம்மை மயக்கு மியல்புடையதென்னின்; உறுப்புக் குறைத்தனபோல -
மற்றிவ்வுடம்பே உயிர் பிரிந்துழித் தன்னுறுப்புகள் துணிக்கப்பட்டன
போல்வனவாக; அழுகிக் குறைந்து குறைந்து சொரிய - அழுகி நாளுக்கு
நாள் தேய்ந்து தேய்ந்து வீழாநிற்ப; வெறுப்பிற் கிடந்த பொழுதின் -
கண்டோர் வெறுப்பிற் கிடனாகிக் கிடந்த காலத்து; வேண்டப்படுவதும்
உண்டோ - இவ்வுடம்பின்கண் யாம் அவாவுதற்கியன்ற தன்மையும்
உண்டாகுமோ? கூறுதிர் என்பதாம்.

     (வி - ம்.) “உறுப்பு. கண் முதலிய புறவுறுப்புக்களும் குடர் முதலிய
உள்ளுறுப்புக்களுமாம். தோலாற் போர்த்து மறைக்கப்பட்