டிருத்தலால் இது விழைவிற்குச்
சார்வாய் மயக்குவது; அங்ஙனம் போர்க்கப்
படாவிடின் அருவருக்கத் தக்கதேயாம் என்பாள். மறைப்பில் விழைவிற்குச்
சார்வாய் மயக்குவது என்றாள். அங்ஙனம் மயக்குமேனும் இஃது அழுகிக்
குறைந்து குறைந்து சொரியக் கிடந்த பொழுதின் இதன் கண்
மயங்குவதற்குரிய தன்மை சிறிதும் இல்லையாம் என்றவாறு.
என்புந்
தடியும் உதிரமும் யாக்கை என்று
அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி
வழுவொடு கிடந்த புழுவின் பிண்டம்
என்றார் மணிமேகலையினும். இன்னும், இவ்விடம்பியல்பினை:--
காலி
ரண்டுநி றுத்தி மேலிரு கைபி ணைத்தொரு புறவெலும்
பாலி ணக்கிமு கட்டு மேல்வளை யடர்ந ரம்பெனு மாக்கையாற்
கோலி யிட்டப ழுக்க ழிக்கொரு குறைவு றாமல் வரிந்துமேற்
றோலி ணக்கிய கற்றை வேய்ந்துயர் சுவர்பு லால்கொ டியற்றியே
வந்து
போகவி ரண்டு வாசல் வகுத்து மற்றெழு சாளரந்
தந்து சாக்கிர மாதி யீரிரு தளமெ டுத்ததன் மேன்மலர்க்
கொந்து லாவிய மாமு டிக்கன கும்பம் வைத்தவிர் கூந்தலா
முந்து நீள்கொடி மாட நாலு முகக்கண் மாளிகை முற்றினாள்
எனவரும் மெய்ஞ்ஞான
விளக்கச் செய்யுள்களும் (அவித்தியா - 13 - 14.)
என்பினை
நரம்பிற் பின்ளி யுதிரந்தோய்த் திறைச்சிமெத்திப்
புன்புறந் தோலைப் போர்த்து மயிர்புறம் பொலிய வேய்ந்திட்
டொன்பது வாயி லாக்கி யூன்பயில் குரம்பை செய்தான்
மன்பெருந் தச்ச னல்லன் மயங்கினார் மருள வென்றான்
எனவரும் சீவக சிந்தாமணிச் செய்யுளும் (1577) அறிவுறுத்துதலையும்
ஈண்டு
நினைக. (13)
|
இதுவுமது
|
14. |
எனதெனச்
சிந்தித்த லான்மற்
றிவ்வுடம் பின்பத்துக் காமேற்
றினைப்பெய்த புன்கத்தைப் போலச்
சிறியவு மூத்தவு மாகி
நுனைய புழுக்குலந் தம்மா
னுகரவும் வாழவும் பட்ட
வினைய வுடம்பினைப் பாவி
யானென தென்னலு மாமே. |
(இ
- ள்.) பாவி-தீவினையாளனே!; எனது எனச் சிந்தித்தலால்
- என்னுடையது என்று யான் உரிமை கொண்டாடுதற்
|