எனவும் வரும் மெய்ஞ்ஞான
விளக்கச் செய்யுள்களும் நினையற்பாலவாம். (14)
|
இறைமாட்சி
|
15. |
இறந்த
நற்குண மெய்தற் கரியவா
யுறைந்த தம்மையெல் லாமுட னாக்குவான்
பிறந்த மூர்த்தியொத் தான்றிங்கள் வெண்குடை
யறங்கொள் கோலண்ணன் மும்மத யானையான். |
(இ
- ள்) மும்மத யானையான் - மூன்று மதங்களையும்
பொழிகின்ற
களிற்றியானையையுடையவனும்; திங்கள் வெள்குடை - நிறைத்திங்கண்
மண்டிலம் போன்ற வெள்ளிய தன் குடையினாலே ;அறங்கொள் கோல் -
அறத்தையே குறிக்கோளாகக் கொண்ட செங்கோன் முறைமையினையுடைய;
அண்ணல் - இவ்வேந்தன் இவ்வாற்றால்; இறந்த நற்குணம் இவ்வுலகத்தை
விட்டகன்று போய்விட்ட நல்ல மக்கட் பண்புகள்; எய்தற்கு அரியவாய் -
மீண்டும் மாந்தர் எய்துதற்கரியனவாகி; உறைந்த தம்மை எல்லாம் -
இருந்தவற்றை யெல்லாம் ; உடன் ஆக்குவான் - மீண்டும் இவ்வுலகத்து
மக்களோடே சேர்த்து அவரை யுய்விக்கும் பொருட்டு; பிறந்த மூர்த்தி
ஒத்தான் - துடித விமானத்தினின்றும் போந்து இந்நிலவுலகத்திற்
றோன்றியருளிய புத்த பெருமானையே ஒத்தவனாய்த் திகழ்ந்தான் என்பதாம்.
(வி
- ம்) இச்
செய்யுள் தொடங்கிவருகின்ற செய்யுள்கள்
குண்டலகேசி என்னும் பெருங்காப்பியத்திற் பேசப்படுகின்ற அரசன்
மாண்புகள். இந்த அரசனுடைய பிற மாண்புகள் இச் செய்யுளின்முன் பல
செய்யுட்களிற் பேசப்பட்டிருத்தல் வேண்டும் என்று நினைத்தற்கிடனுளது
அவையெல்லாம் கிடைத்தில. இச் செய்யுளின் முற்போந்த செய்யுட்களில்
அந்த அரசனுடைய அறமாண்புகளை வருணித்து இச் செய்யுளில்
இவ்வாற்றால் இம் மன்னவன் புத்தபெருமானையும் ஒப்பாவான் என்று
கூறுகின்றார் போலும்.
புத்தபெருமான்
உலகின்கண் அறங்கள்கெட்டு மக்கட்பண்பு
அழித்தகாலத்தே உலகிற்றோன்றி அவ்வறங்களை மீண்டும் உலகில் நிறுவினன்
என்பகவாகலின் “இறந்த நற்குணம் எய்தற்கரியவா யுறைந்த தம்மையெல்லாம்
உடனாக்குவான் பிறந்த மூர்த்தி” என்று புத்தரைச் சுட்டினார். மக்கள்
மேற்கொள்ளாவிடினும் அறம் அழிந்தொழியாமையின் எய்தற்கரியவாய்
உறைந்த தம்மையெல்லாம் என்றார். உறைந்த தம்மையெல்லாம் என்றது
உறைந்தவற்றை யெல்லாம் என்றவாறு. புத்தர் உலகில் அறமுதலியன
நிலைகுலைந்துழி வந்து தோன்றுவர் என்பதனை,
“பூமகளே
முதலாகப் புகுத்தமரர் எண்டிசையும்
தூமலரா லடிமலரைத் தொழுதிரந்து வினவியநான்
காமமும் கடுஞ்சினமுங் கழிப்பரிய மயக்கமுமாய்த்
|