சொல்லலு
முண்டியான் சொல்லுத றேற்றார்
மல்லன்மா ஞாலத்து மக்களே யாதலின்
சக்கர வானத்துத் தேவ ரெல்லாம்
தொக்கொருங் கீண்டித் துடித லோகத்து
மிக்கோன் பாதம் விழுந்தன ரிரப்ப
விருள்பரந்து கிடந்த மலர்தலை யுலகத்து
விரிகதிர்ச் செல்வன் றோன்றின னென்ன
................................................
புத்த ஞாயிறு தோன்றுங் காலை
எனவரும் மணிமேகலையானும்,
(12 ; 58 - 86) உணர்க,
இன்னும்,
துடித
விமானத்தினின்றும் போந்து குயிலாபுரத்துத் தோன்றி உலும்பினி
வனத்துப் பிறந்து சுபிலாபுரத்துப் புத்ததத்துவம் பெற்றுத் தர்மோப தேசம்
பண்ணி மகாபோதிப் பிரதேசத்துப் பொன்றக் கெடுதல் புத்தனுக்கு நியதி
(மொக்கலவாதச் சருக்கம் 160 ஆம் பாட்டுனர) எனவரும் நீலகேசி
யுரையாசிரியர் கூற்றும் ஈண்டு நினைக. (15)
|
இதுவுமது |
16. |
சீற்றஞ்
செற்றுப்பொய் நீக்கிச்செங் கோலினாற்
கூற்றங் காய்ந்து கொடுக்க வெனுந்துணை
மாற்ற மேநவின் றான்றடு மாற்றத்துத்
தோற்றந் தன்னையுங் காமுறத் தோன்றினான். |
(இ - ள்)
சீற்றம் செற்று - அம்மன்னவன் இப் பேருலகத்தின்கண்
ஓருயிர் மற்றோருயிரைச் சினந்து வருத்தாதபடி உயிரினங்களின் சினத்தையும்
அகற்றி; பொய் நீக்கி - மாந்தர் பொய்பேசாதவண்ணம் செய்து;
செங்கோலினால் கூற்றம் காய்ந்து - தனது செங்கோல் முறைமையாலேயே
தனது ஆட்சியின்கண் முறைபிறழ்ந்து மறலியும் புகுந்துயிரைக் கவராதபடி
அவனையும் தடுத்து ; கொடுக்க எனுந்துணைமாற்றமே நவின்றான் - தான்
தன் குடிமக்களுக்கு ஆணை பிறப்பிப்பதாயின் உடையோர் எல்லாம்
இல்லோர்க்கு வழங்குமின் ! என்னும் இந்நல்லறத்தையே ஆணையாகப்
பிறப்பிக்குமளவேமன்றி அவர் வருந்தும்படி பிறிதோர் ஆணையும்
இடானாயினான், தடுமாற்றத்துத் தோற்றந் தன்னையும் காமுறத்
தோன்றினான் - இங்ஙனமிருந்தவாற்றால் இவன் ஆட்சியில்
இள்புற்றிருந்தோரெல்லாம் வீடு வேண்டாராய்த் தடுமாற்றத்திற்குக்
காரணமான பிறப்பினையும் விரும்புவாராகும் படி தோன்றித்
திகழ்வானாயினன் என்பதாம்.
|