(வி
- ம்.) செங்கோன்
முறை பிறழாத வேந்தர் ஆளும் நாட்டில்
உயிரினங்கள் சினந்தவிர்ந்து அருட்குணமுடையவாய் ஒன்றற்கொன்று
தீமைசெய்யாவாகலின், செங்கோலினால் சீற்றம் செற்றுப் பொய் நீக்கினன்
என்றார்,
இதனை,
.......பரல் வெங்கானத்துக்
கோல்வ லுளியமுங் கொடும்புற் றகழா
வாள்வரி வேங்கையு மான்கண மறலா
அரவுஞ் சூரு மிரைதேர் முதலையும்
உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா
செங்கோற் றென்னவர் காக்கும் நாடு
எனவரும் இளங்கோவடிகளார்
மொழியானும் (13 : 4)
அல்லது
கடிந்த அறம்புரி செங்கோல்
பல்வேற் றிரையற் படர்குவி ராயின்
கேள்வன் நிலையே கெடுகதின் னவலம்
அத்தஞ் செல்வோர் அலறந் தாக்கிக்
கைப்பொருள் வௌவும் களவோர் வாழ்க்கைக்
கொடியோ ரின்றவன் கடியுடை வியன்வுலம்
உருமும் உரறா தரவுந் தப்பா
காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டாங்கு
அசைவுழி அசைஇ நசைவுழித் தங்கிச்
சென்மோ இரவல!
எனவரும் பெரும்பாணாற்றுப்படையானும்
(36 - 45) உணர்க,
கருதலரும்
பெருங்குணத்தோ ரிவர்முதலோர் கணக்கிறந்தோம்
திரிபுவன முழுதாண்டு சுடர்நேமி செலதின்றோர்
பொருதுறைசேர் வேலினாய் புலிப்போத்தும் புல்வாயும்
ஒருதுறையி னீருண்ண வுலகாண்டோ னுளனொருவன்
எனவரும் இராமாவதாரத்தினும்
(குலமுறை, 5) இக்கருத்து வருதலுணர்க,
இனிச்
செங்கோலரசர் நாட்டில் உயிரினங்கள் தத்தமக்கியன்ற அகவை
நாளெல்லாம் வாழ்ந்து இயல்பாக இறத்தலன்றி இளம் பருவ முதலிய காலத்தே
இறத்தல் இல்லையாகலின், செங்கோலினாற் கூற்றங் காய்ந்து என்றார். இக்
கருத்தினை :--
கூற்ற
மில்லையோர் குற்ற மிலாமையால்
சீற்ற மில்லைதஞ் சிந்தையிற் செய்கையால்
|