பக்கம் எண் :

26

என்பது இந்நிலவுலகத்தே வாழும் மக்கள் போல்வாரிடத்து மட்டும்
உண்டாவதொன்றன்று; குற்றம் வாய்மை நண்ணினார் திறத்தும் -
குற்றமானது மெய்யுணர்வு பெற்ற மேலோரிடத்துத் தோன்றினும்; குற்றமே -
குற்றமாகவே கொள்ளப்படுவதன்றி; நல்ல ஆகா - அவர் மேலோர்
என்பதற்காக நல்லனவாகி விடா; ஆதலால் எத்தகையோரும் தம்பாற்
குற்றம் நிகழாதபடி விழிப்புடனிருத்தல் வேண்டும் என்பதாம்.

     (வி - ம்.) ஆதலால் எத்தகையோரும் தம்பாற் குற்றம் நிகழாதபடி
விழிப்புடன் இருத்தல் வெண்டும் என்பது குறிப்பெச்சம்.

   கந்தருவர் அரக்கர் முதலியோரையும் கருதி மண்ணுளார் தம்மைப்
போல்வர் என்றார், வாய்மை நண்ணினார் என்றது மெய்யுணர்வு கைவரப்
பெற்ற மேலோரை!

     “தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
      கொள்வர் பழிநாணு வார்”                   --குறள், 433

எனவும்,

   
  “குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
      அற்றந் தரூஉம் பகை”                      --குறள், 434

எனவும் வரும் அருமைத் திருக்குறள்களையும் நோக்குக,         (17)

    இடுக்கணழியாமை

18. மறிப மறியு மலிர்ப மலிரும்
பெறுப பெரும்பெற் றிழப்ப விழக்கும்
அறிவ தறிவா ரழுங்கா ருவவா
ருறுவ துறுமென் றுரைப்பது நன்று.

     (இ - ள்.) மறிப மறியும் - அழியும் பொருளெல்லாம் அழிந்தே தீரும்;
(அவற்றை யழியாமற் பாதுகாத்த லியலாது) மலி்ர்ப மலிரும் - அங்ஙனமே
வளரும் ஊழுடையன வெல்லாம் வளர்ந்தே தீரும்; (அவற்றை வளராமற்
றடுக்கவுமியலாது) பெறுப பெறும் - பயன் பெறுகின்ற ஆகூழுடையன
பெற்றே தீரும்; (அப்பயனைப் பெறாவண்ணம் செய்தலு மியலாது); பெற்று
இழப்ப இழக்கும் - அங்ஙனமே, பெற்றபயனை இழக்கும் போகூழுடையன
அவற்றை இழந்தே தீரும்; (இழவாதபடி செய்ய வியலாது) அறிவது அறிவார்
- ஆதலால் அறிதற்குரிய பொருளியல்பினை அறிந்த மேலோர்; அழுங்கார்
- தமக்குப் பொருளிழவு நேர்ந்துழி இது பொருளியல்பென் றுணர்ந்து
அவ்விழவின்பொருட்டு வருந்துதலிலர். உவவார் - அங்ஙனமே தாம் சிறந்த
பேறுகளைப் பெற்ற வழியும் இஃது ஊழின் செயலென் றுணர்ந்து அப்பேறு
கருதியும் பெரி