தும்
களிப்பதுமில ராவர்; உறுவது உறுமென்று உரைப்பது நன்று - ஆதலால்
வருவது வந்தே தீரும் என்று
உலகோர் கூறும் பழமொழி மிகவும்
வாய்மையுடையதென்று கொண்மின் என்பதாம்.
(வி
- ம்.) உறுவதுறும்
என்பது ஒரு பழமொழி.
மறிப,
மலிர்ப, பெறுப, இழப்ப என்பன பலவறிசொல்.
மெய்யுணர்வுடையோர் யாது நிகழ்ந்தாலும் எல்லாம் ஊழின் செயலென்று
கருதி அமைதியுடனிருப்பர். செல்வம் வந்துழிக் களிப்பதிலர். வறுமை வந்துழி
வருந்துவதுமில்லை என்றவாறு, இக்கருத்தோடு,
யாதும்
ஊரே யாவருங் கேளிர்
தீது நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படுஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியந்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே
எனவரும் கணியன் பூங்குன்றனார்
பொன்மொழியும், (புறநா - 192)
மெய்த்தி
ருப்பத மேவென்ற போதினும்
இத்தி ருத்துறந் தேகென்ற போதினும்
சித்தி ரத்தி னலர்ந்தசெந் தாமரை
யொத்தி ருந்த முகத்தினை யுன்னுவாள்
எனவரும் கம்பநாடர்
கவின்மொழியும் ஒப்புநோக்கற் பாலன. (18)
|
இதுவுமது
|
19. |
வேரிக்
கமழ்தா ரரசன்விடு
கென்ற போழ்தும்
தாரித்த லாகா வகையாற்கொலை
சூழ்ந்த பின்னும் |
|