இடுக்கண்
வந்துறவு மெண்ணா
தெரிசுடர் விளக்கி னென்கொல்?
நடுக்கமொன் றின்றி தம்பால்
நகுபொருள் கூறுகென்ன,
அது கேட்ட அவ்விளந்துறவி,
வேந்தே!
அடுக்குவ
தடுக்கு மானால் அஞ்சுதல் பயனின் றென்றே
நடுக்கம தின்றி நின்றாம் நல்லறத் தெளிவு சென்றாம்
என விடை யிறுத்தமையும்
நம்நினைவிற்கு வருகின்றன.
இன்னும்,
இடுக்கண்வந்
துற்ற காலை யெரிகின்ற விளக்குப் போல
நடுக்கமொன் றானு மின்றி நகுகதா நக்க போழ்தவ்
விடுக்கணை யரியு மெஃகா மிருந்தழுதி யாவ ருய்ந்தார்
வடுப்படுத் தென்னை யாண்மை வருபவந் துறுங்க ளன்றே
எனவரும் சீவகசிந்தாமணியும்
(509),
பரியினு
மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா தம, --குறள், 76
எனவும்,
நன்றாங்கா
னல்லவாக் கண்பவ ரன்றாங்கா
லல்லற் படுவ தெவன் --குறள், 329
எனவும் வரும்
திருக்குறள்களும் ஈண்டு நினையற் பாலனவாம். (19)
குண்டலகேசி
என்னும் பெருங்காப்பியத்தின்கண் பெரும்பாலும்
அழிந்தனபோக எஞ்சி நின்று
இற்றைநாள் கிடைத்துள்ள செய்யுள் பத்தொன்பதிற்கும்
பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார்
வகுத்த
சொற்பொருள் உரைகளும் விளக்கவுரையும்
ஒப்புமைப் பகுதிகளும்
முற்றும்.
|