மலை எடுத்து - மலைகளைப் பெயர்த்துக் கொண்டும்; மரங்கள் பறித்து-மரங்களை வேருடன் பறித்துக் கொண்டும்; மாடு-பக்கங்களில் உள்ள; இலை முதல் பொருள்-இலை முதலிய பொருள்களாகிய; யாவையும் ஏந்தலான்-எல்லாவற்றையும் ஏந்தி வருவதால்; அலை கடல் தலை-அலைகளையுடைய கடலிடத்தே; அன்று-இராமபிரான் கடலைக் கடக்க நேர்ந்த அந்தக் காலத்தில்; அணை வேண்டிய- அணை கட்ட விரும்பிய: நிலையுடைக் கவி நீத்தம்- (இராமபிரான் திருப்பணியிலே) நிலைபேறுடைய வானரப் பெருங்கூட்டத்தைப் போலவே; அந் நீத்தமே- அந்தச் சரயுவின் வெள்ளம் (விளங்கியது) தலை ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்தது. வேண்டுதல்; விரும்புதல். அணை வேண்டுதல் என்பது குரங்குச் சேனைக்குச் செல்லும்போது அணை கட்ட விரும்பியதையும். ஆற்று வெள்ளத்துக்குச் செல்லும்போது அணை கட்ட வேண்டிய நிலையையும் பொருத்திக் காண்க. இலை முதல் பொருள்; இலை. முதலானவை ஆற்று வெள்ளத்தில் ஈர்த்து வரப்படுபவன. குரங்குகளுக்கு உணவாவன. 9 குடிகாரர் :வெள்ளம் |