தீம்புனல் - இனிய நீர்ப்பெருக்கு; ஈக்கள் வண்டொடு மொய்ப்ப-ஈக்கள் வண்டுகளோடு சேர்ந்து மொய்த்திட; வரம்பு இகந்து - அணை கடந்து ஒழுகலாற்று எல்லையை மீறி; ஊக்கம் மிகுந்து- எழுச்சி பெருகி (உற்சாகம் மிகுந்து) உள் தெளிவு இன்றியே - உள்ளிடத்து (உள்ளத்திலே) தெளிவே இல்லாமல்; தேக்கு எறிந்து வருதலின்-தேக்கு மரங்களை மோதி இழுத்து வருதலால் / ஏப்பமிட்டு வருவதால்; தேன் நுகர் மாக்களை மானும். ஈக்களும் வண்டுகளும் மொய்ப்பது குடிகாரரிடத்து எழும் கள் நாற்றம் காரணமாக. ஆற்று வெள்ளம் கரை கடப்பதையும். குடிகாரர் ஒழுக்க எல்லையைக் கடப்பதையும் ‘வரம்பு இகந்த’ என்ற தொடர் சுட்டிற்று. ஊக்கம்: வெள்ளத்துக்கு வேகமும் குடியருக்கு எழுச்சியையும் குறித்தது. உள் தெளிவு இன்மை; வெள்ளத்தின் உட்புறம் கலங்கியிருப்பது; மனத்திலும் அறிவிலும் தெளிவின்மை குடியரிடம் இருப்பது. தேக்கு மரங்களை வீழ்த்தி இருத்திவருவது வெள்ளம்; ஏப்பமிட்டுக் கொண்டு வருவது. தேக்கெறிதல். தேன்-கள். வாக்கு தேன்-வினைத்தொகை. ‘மஞ்சுலாம் சோலை’ என்று தொடங்கும் பெரிய திருமொழிப் பாசுரத்தின் வியாக்கியானத்தில் இப்பாடலின் முதலடி பெரியவாச்சான்பிள்ளையால் எடுத்தாளப்பட்டது. 10 கடலொடு போர் செய்ய... |