கொடிச்சியர் இடித்த சுண்ணம்- குறிஞ்சி நிலத்துப் பெண்கள் இடித்த மணப் பொடியினையும்; குங்குமம். கோட்டம். ஏலம்- குங்குமப்பூ. கோட்டம். ஏலக்காய்; நடுக்குறு சந்தம்- தன் குளிர்ச்சியால் உடலை நடுங்கச் செய்கின்ற சந்தனம்; சிந்தூரத்தொடு. நரந்தம். நாகம்- வெட்சிப் பூ. நரந்தம். புல். சுரபுன்னைப்; கடுக்கை. ஆர் வேங்கை. கோங்கு-கொன்றை. ஆத்தி. வேங்கை. கோங்கம்; பச்சிலை. கண்டில் வெண்ணெய்-பல்வகைப் பச்சிலைகள். கண்டில் வெண்ணெய் என்னும் பூண்டு; அடுக்கலின் அடுத்த தீந்தேன்- மலையில் கட்டப்பட்ட இனிய தேன்கூடு; அகிலொடு - அகில்-அகில் கட்டை ஆகியவற்றையும் இழுத்து வருவதால்; நாறும்-சரயுவின் வெள்ள நீர் மேற்குறித்த பொருள்களின் மணத்தைக் கொண்டு இயங்கும். ‘சரயுவின் வெள்ள நீர்’ என்ற எழுவாய் வருவித்து உரைக்கப்பட்டது. அன்று. ஏ அசைகள். 13 வெள்ளம்; சேனை |