செறி நறுந்தயிரும்- தொய்ந்து இறுகிய மணம் மிக்க தயிரையும்; பாலும். வெண்ணெயும். சேந்த நெய்யும்- பால். வெண்ணெய். சிவந்த நெய் ஆகியவற்றையும்; உறியொடு வாரி உண்டு- அவற்றைத் தாங்கியிருந்த உறிகளொடு கவர்ந்து உண்டு; குருந்தொடு மருதம் உந்தி- குருந்த மரத்தோடு மருத மரத்தையும் முறித்துத் தள்ளி;மறி விழி ஆயர் மாதர்- மானின் விழி போன்ற விழிகள் உடைய இடைக்குலப் பெண்கள்; வனை துகில்- உடுத்துகின்ற ஆடைகளை; வாரும் நீரால்- ஈர்க்கின்ற (தண்ணீரால்) தன்மையால்; பொறி வரி அரவின் ஆடும்- புள்ளிகளையு வரிகளையும் கொண்ட (காளியன்கன் என்ற) பாம்பின்மேல் ஆடிய; புனிதனை மானும்- தூய கண்ண பெருமானை (அந்த சரயு வெள்ளம்) ஒத்திருக்கும். செறி தயிர். நறுந்தயிர் எனப் பிரித்துக் கூட்டுக. செறி தயிர் - வினைத்தொகை; நறுந்தயிர்- பண்புத் தொகை. உறியிலிருந்து தனித்தனியாக எடுக்காமல் உறியோடு மொத்தமாகக் கவர்ந்த செயலை ‘உறியொடு’ என்ற சொல்லாட்சி குறித்தது. மறிவிழி மருளுதலைக் குறித்தது. வனை துகில்; வினைத்தொகை. வனைதல் அழகுற அணிதல். அரவின் ஆடியது-காளிங்க நர்த்தனக் கதை குறித்தது. ‘இயல்பிலேயே’ குற்றத்தின் நீங்கியவனாதலின் கண்ணனைப் புனிதன் என்றார். புராணச் செய்திகளைக் கற்பனை உத்தியாகக் கொள்வதை இக்காலத் திறனாய்வாளர் ‘தொன்மம்’ என்பர். 15
யானை: வெள்ளம் |